தோழர் S. K. வியாஸ் படத்திறப்பு விழா
மற்றும் அஞ்சலி கூட்டம்.
கடந்த 26.2.2015 அன்று மாலை சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலக வளாகத்தில் மறைந்த தலைவர் தோழர். S.K. வியாஸ் அவர்களின் படத்திறப்பு நிகழ்வும் மற்றும் அஞ்சலி கூட்டமும் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம், தமிழ்நாடு மற்றும் அஞ்சல், தொலைபேசி, ரயில்வே, பாதுகாப்பு மற்றும் அஞ்சல், தொலைபேசி ஓய்வூதியர் சங்கங்கள் இணைந்து நடத்தினர். கூட்டத்தை மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தலைவர் தோழர். J.ராமமூர்த்தி தலைமை தாங்கி நடத்தினார். முதலாவதாக சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர். தோழர். C.A. ராஜா ஸ்ரீதர் மறைந்த தலைவரின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து பாதுகாப்பு ஊழியர் சம்மேளன தலைவர். N .J . ராமன் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழக பொதுச் செயலாளர் தோழர். M. துரைபாண்டியன், அஞ்சல் மற்றும் ஆர். எம். எஸ். ஓய்வூதியர் அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர். K. ராகவேந்திரன், BSNL ஓய்வூதியர் சங்கங்களின் தலைவர்கள் தோழர்.D. கோபாலகிருஷ்ணன், தோழர். C.K. நரசிம்மன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழக முன்னாள் தலைவர். தோழர். A.G. பசுபதி, அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் அமைப்பின் மாநில தலைவர். தோழர். M.கண்ணையன், கல்பாக்கம் அணுமின் கழக சங்க தலைவர் தோழர். தனஞ்சயன்,AG அலுவலக ஊழியர் சங்கத்தை சேர்ந்த தோழர். பஷீர் அகமது , NFPE அஞ்சல் மூன்று மகிளா கமிட்டி மாநிலத் தலைவர் தோழர். ஏஞ்சல் சத்தியநாதன் அவர்களும் அஞ்சலி நினைவஞ்சலி செலுத்தினர் . இறுதியாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொருளாளர் தோழர். சுந்தரமூர்த்தி நன்றி உரை ஆற்றினார். மறைந்த தலைவருக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் பெருமளவில் ஓய்வூதியர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment